Skip to content
Home » சிதம்பரம் … உடற்கல்வி ஆசிரியர் கொடூர கொலை….

சிதம்பரம் … உடற்கல்வி ஆசிரியர் கொடூர கொலை….

  • by Senthil

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள திருவக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கின்ற அருண்பாண்டியன் (28). தனியார் பள்ளியில்  உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.  இவருக்கு திருமணமாகி, 1 வயதில் பெண் குழந்தை  உள்ளது. இன்று காலை அருண்பாண்டியன் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனைப்பார்த்த, அந்தப் பகுதியை சேர்ந்தோர், உடனடியாக போலீஸாருக்கு இது குறித்த தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு  வந்த  அண்ணாமலை நகர் போலீஸார், அருண்பாண்டியனின் சடலத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, கொலை வழக்காக பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.  மோப்பநாய் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த வீட்டின் அருகே சென்று நின்றது. இதையடுத்து, குற்றவாளியை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் விடுமுறை தினமான நேற்று சந்திரமலை பகுதி அருகே அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டு, சீட்டு விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. அங்கு வந்த சதீஷ் என்பவருக்கும், அருண்பாடியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் சதீஷ், அருண் பாண்டியனின் தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பியதாக தெரியவந்துள்ளது. மேலும், சதீஷ் மற்றும் அருண்பாண்டியனுக்கு இடையே பள்ளிக் காலத்தில் இருந்தே முன் பகை இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனிப்படை போலீஸார், தலைமறைவாகியுள்ள குற்றவாளி சதீஷை பிடிக்க நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிதம்பரத்தில் பள்ளி ஆசிரியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!