Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பேருந்தில் உடை மாற்றிய பிக்பாக்கெட் கும்பல் சிக்கியது – 2 பேர் கைது!

கோவில்பட்டியில் பணம் கேட்டு சிறுவனை கடத்தி தாக்கிய 4 பேர் கைது

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரியிலிருந்து ரான்னி என்ற இடத்திற்கு நேற்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள், ஓடும் பேருந்திற்குள்ளேயே தங்களது உடைகளை மாற்றியுள்ளனர்.

இதனைக் கவனித்த பேருந்து நடத்துனர் அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்து உடனடியாக ரான்னி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மகளிர் போலீசார் விரைந்து சென்று அந்தப் பேருந்தை வழிமறித்து நிறுத்தி, 2 பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய சோதனையில், ஒரு பெண் தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த ரூ.21 ஆயிரம் ரொக்கப் பணம் சிக்கியது. விசாரணையில், அவர்கள் இருவரும் சேர்ந்து பேருந்து பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்தது தெரியவந்தது.

மேலும், பிடிபட்டவர்களில் ஒருவர் தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த கீதா (33) என்பதும், மற்றொருவர் தமிழக-கேரள எல்லைப் பகுதியான கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த பார்வதி (38) என்பதும் விசாரணையில் உறுதியானது.

சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால், பக்தர்களிடம் கைவரிசை காட்டத் திட்டமிட்டு இவர்கள் வந்ததாகப் போலீசார் தெரிவித்தனர். விசாரணையைத் தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!
Secret Link