Skip to content
Home » 9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

  • by Senthil

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசியாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ம் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்க்க 3,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தேர்வு கூடங்களில் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

1-ந்தேதி தொடங்கும் பிளஸ்-2 தேர்வு 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதலில் தமிழ் தேர்வும் அதனை தொடர்ந்து 5-ந்தேதி ஆங்கிலம், 8-ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகள், 11-ந்தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், 15-ந்தேதி இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, 19-ந்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 22- ந் தேதி பயாலஜி, தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 3, 4 நாட்கள் இடைவெளி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!