Skip to content
Home » சோனியா காந்திக்கு பிறந்தநாள்….. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சோனியா காந்திக்கு பிறந்தநாள்….. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Senthil

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 77வது பிறந்தநாள். இதையொட்டி இந்தியா முழுவதும் காங்கிரசார் சோனியாவின் பிறந்தநாளை  உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்  தமிழ்நாடு முதல்வர்  மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சோனியாவுக்கு வாழ்த்து ெதரிவித்துள்ளார். அதில், அர்ப்பணிப்புமிக்க பொதுவாழ்க்கைக்கு அடையாளமாக விளங்கும் நாடாளுமன்ற காங்கிரஸ்கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.  நீங்கள் நீண்டகாலம் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும். சோனியா காந்தியின் ஆழ்ந்த தொலைநோக்கும் அனுபவச் செல்வமும் எதேச்சாதிகார சக்திகளிடம் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் நம் ஒன்றிணைந்த முயற்சிக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தொடர்ந்து அமைந்திடட்டும் என்று வாழ்த்தி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!