விமானப்படை வீரர்களைப் போற்றி கௌரவிக்கும் விதமாக அக்டோபர் 8ம் தேதி விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது; விமானப்படை தினத்தில், இந்திய விமானப்படையின் துணிச்சலான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மரியாதையுடன் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எங்கள் வானத்தைப் பாதுகாப்பாகவும், எங்கள் உற்சாகத்தையும் உயர்வாகவும் வைத்திருக்கிறது. உங்களது தன்னலமற்ற சேவைக்கும், தியாகத்திற்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம், ஜெய்ஹிந்த். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
