உள்நாட்டு உற்பத்திக்கு 20 லட்சம் கோடி.. பிரதமர் மோடி

79
Spread the love
பிரதமர் மோடி நேற்று இரவு நாட்டுமக்களுக்கு உரையாற்றினார்.. அவற்றில் சில பகுதிகள்..உலக நாடுகள் கொரோனாவால் இந்தியாவிலும் பல குடும்பங்களில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து உள்ளனர். அனைவரின் சார்பாக வேதனையை பகிர்ந்து கொள்கிறேன். இந்த நெருக்கடி மனித இனம் இதுவரை நினைத்துப்பார்க்காத, கேள்விப்படாத ஒன்று. நம்மை நாமே பாதுகாத்துக்கொண்டு மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவ தொடங்கிய போது இங்கு நோய்த்தொற்று பாதுகாப்பு உடை ஒன்று கூட தயாரிக்கப்படவில்லை. வெகுசில ‘என்95’ பாதுகாப்பு முகக்கவசங்களே கிடைத்தன. இப்போது இந்தியாவில் 2 லட்சம் நோய்த்தொற்று பாதுகாப்பு உடைகளும், 2 லட்சம் ‘என்95’ பாதுகாப்பு முகக்கவசங்களும் தினமும் தயாரிக்கப்படுகின்றன. பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு, தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும். ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். இது குறித்து நிதி மந்திரி நாளை (அதாவது இன்று) விரிவான தகவல்களை வெளியிடுவார். கொரோனா நம்முடன் நீண்ட நாட்கள் இருக்கும் என்று விஞ்ஞானிகளும், நிபுணர்களும் கூறுகிறார்கள். 4-வது முறையாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 18-ந்தேதிக்கு முன் அறிவிக்கப்படும். மாநிலங்கள் தெரிவித்துள்ள யோசனைகளின் அடிப்படையில் இதுபற்றி அறிவிக்கப்படும். இந்த ஊரடங்கு நீட்டிப்பு புதிய வழிமுறைகளுடன் முந்தைய ஊரடங்குகளை விட வித்தியாசமானதாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

LEAVE A REPLY