Skip to content
Home » 3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

  • by Senthil

தூத்துக்குடியில்  இன்று நடந்த  விழாவில்  பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் தூத்துக்கடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும்  இந்த விழாவில் அடிக்கல் நாட்டினார். மேலும் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், ரூ. 1,477 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை, நாடு முழுவதும் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஒட்டு மொத்தமாக தூத்துக்குடிவிழாவில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்து பேசினார்.  வணக்கம் என தமிழில் கூறி, விழாவில் மோடி பேசியதாவது: காங்கிரஸ் அரசின் மீது நான் குற்றம் சாட்டுகிறேன்.  இந்த திட்டங்கள்  கோரிக்கைகளாக நி்றைவேற்றப்படாமல் இருந்தது. ஆனால் இன்று  நான் இங்குஉங்கள் கோரிக்கைகளை  நிறைவேற்ற வந்திருக்கிறேன்.

இந்த திட்டங்கள் மூலம்  தமிழ்நாடு வளர்ச்சியின் புதிய  சகாப்தத்தை  எழுதி வருகிறது. இங்கு தொடங்கப்பட்ட  ஹைட்ரஜன் படகு  நாளை கங்கையில் பயணிக்கும் . அப்போது இரு மாநிலங்களுக்கும்  இடையே நல்ல உறவு பலப்படும். இது தமிழகம் எனது தொகுதிக்கு அளிக்கும் நன்கொடை.  இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது.  லட்சகணக்கானோருக்கு வேலை கிடைக்கும்.

இன்று 75 கலங்கரை விளக்கங்கள் திறக்கப்படுகின்றன. இவை எதிர்காலத்தில் சுற்றுலா மையமாகும். கடந்த 10 ஆண்டுகளில்  1300 கிலோ மீட்டர் ரயில் கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.  2ஆயிரம் கி.மீ. மின்மயமாக்கப்பட்டுள்ளது.  பல மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.  5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  மத்திய அரசு தமிழ்நாட்டில்  ஒன்றரை லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது.

நான் சொல்வதை  இங்குள்ள செய்திதாள்கள்  பிரசுரிக்காது. ஏனென்றால்  என்னைப்பற்றிய செய்திகளை இங்குள்ள அரசு பிரசுரிக்க விடாது. ஆனாலும் கூட  இந்த தடைகளை தாண்டி தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களை   நாங்கள் செயல்படுத்தியே தீருவோம்.

தமிழ்நாட்டில் 3 பெரிய துறைமுகங்கள், 12 சிறிய துறைமுகங்கள் உள்ளன .  கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகம் 35 சதவீதம்  வளர்ச்சி பெற்றுள்ளது.  இங்கு வேலைவாய்ப்புக்கான  வாய்ப்பு அதிகரிக்கும். தமி்ழ்நாடு வேகமாக முன்னேறும் என நம்புகிறேன்.

நான்மூன்றாவது முறையாக  அரசு அமைக்கப்போகும் நேரத்தில் மோடியின் உத்தரவாதத்தை நிறைவேற்றியே தீருவேன். 2 நாளாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறேன். நீங்கள் காட்டும் இதே அன்பு, இந்த பாசத்தை என் மீது எல்லா இடங்களிலும்  பொழிந்தார்கள்.  இந்த  அன்பால் நான் மேலும் ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன்.  இந்த அன்பை நான் பல மடங்காக திருப்பி தருவேன். இது என்னுடைய உத்தரவாதம்.

இந்த உற்சாகம், தமிழ்நாட்டு வளர்ச்சி பயணத்தின் கொண்டாட்டம். இதை இந்தி்யா முழுவதும்  காட்ட உங்கள் செல்போனை எடுத்து  பிளாஷ் லைட் அடித்து காட்டுங்கள்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள்  சர்பானந்தா சோனோவால்,  எல் . முருகன், கவர்னர் ரவி,  கனிமொழி எம்.பி, தமிழக அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில்   பேசிய பிரதமர் மோடி  மத்திய அமைச்சர்கள், ஆளுநர் ரவி, இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டார். ஆனால் , மேடையில் இருந்த தமிழ்நாடு அமைச்சர் ஏ.வ.வேலு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பெயர்களை சொல்லாமல் தவிர்த்துவிட்டார். தமிழக அமைச்சரையும், தொகுதி எம்.பியையும்  விழாவில் பேசவும் அனுமதிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!