Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி தவெக எம்எல்ஏ மீது போலீசில் புகார்

திருச்சி மாவட்டம் லால்குடியை விக்ணேஷ். பொறியாளரான இவர் தன் மனைவி சிவரஞ்சினியுடன் இணைந்து லால்குடி பகுதியில் CM பில்டர்ஸ் என்கிற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முசிறி தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் திருச்சி கே கே நகர் பகுதியில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான லட்சுமி என்பவர் தங்களுடைய நிறுவன அலுவலகத்தை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2025ம் ஆண்டு விக்ணேஷை அணுகியுள்ளார்.

அப்பொழுது அவர் அலுவலகத்தை முழுமையாக பார்த்துவிட்டு அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான தொகையை குறித்து அவரிடம் தெரிவித்து சென்றுள்ளார். அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் சார்பில் வங்கியில் கடன் பெற்று பணிகள் தொடங்கப்பட்டுள்ளது சுமார் 80 லட்சம் வரை வெவ்வேறு தவணையாக விக்னேஷிடம் லட்சுமி வழங்கி உள்ளார். ஆனால் ஆரம்பத்தில் சில பணிகளை மட்டும் செய்துவிட்டு பெரும்பாலான பணிகளை செய்யாமல் அப்படியே விட்டுவிட்டார் இது குறித்து விக்னேசை அணுகி லட்சுமி கேட்டபோது அவர் உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.

பணத்தை திருப்பி கேட்ட பொழுதும் அதை தர மறுத்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி இது குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்பொழுது விக்னேஷ் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கு நீதி கிடைக்குமா என்கிற அச்சத்தில் லட்சுமி உள்ளார் சட்டப்படி விக்னேஷ் மீது நடவடிக்கை எடுத்து தங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என்பது லட்சுமி தரப்பின் கோரிக்கையாக உள்ளது.

ஊழலை ஒழிப்பேன் நியாயமான ஆட்சியை வணங்குவேன் எனக் கூறி வெற்றி பெற்றுள்ள த.வெ.கவினர் மீது ஆட்சி பொறுப்பு ஏற்பதற்கு முன்பாகவே பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகிறது வேட்பாளர்களை சரியான முறையில் தேர்ந்தெடுக்காததே இதற்கு முக்கியமான காரணம் எனக் கூறப்படுகிறது இதற்கு விஜய் உரிய விளக்கம் தர வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது

error: Content is protected !!