Skip to content
Home » இந்துக்கள் உணர்வை புண்படுத்திவிட்டார்…..நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசில் புகார்….

இந்துக்கள் உணர்வை புண்படுத்திவிட்டார்…..நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசில் புகார்….

  • by Senthil

நடிகை  நயன்தாராவை கதையின் நாயகமாக வைத்து அண்மையில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. தனது தனிப்பட்ட குறைகள் மற்றும் தந்தையின் எதிர்ப்பு என பல தடைகளை மீறி உணவு தயாரிப்பதில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம்பெண் ஒருவரின் போராட்ட கதையை அன்னபூரணி .

சென்னை கனமழை நேரத்தில் வெளியானது உள்ளிட்ட சில காரணங்களால் அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் தோல்வியடைந்தது. எனவே அதன் தயாரிப்பாளர்கள் உடனடியாக திரைப்படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட ஏற்பாடு செய்தனர்.

அன்னபூரணி திரைப்படம்

நெட்ஃபிளிக்ஸில் வெளியான அன்னபூரணி தமிழ் மட்டுமன்றி தென்னிந்திய மொழிகளோடு இந்தியிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கூடவே சர்ச்சைகளையும் சேர்த்துள்ளது. ஆச்சாரமான குடும்பத்தில் பிறக்கும் பெண் ஒருவர் அசைவம் சமைக்கத் தயாராவதையும், அதனை நியாயப்படுத்துவதற்காக திரைப்படத்தில் வைக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்களை முன்வைத்தும் சமூக ஊடகங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான  மும்பையை சேர்ந்த ரமேஷ் சோலங்கி அளித்துள்ள புகாரில் அன்னபூரணி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிக்ஸ் இந்தியா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் மும்பை காவல்துறை மற்றும் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரை கோரியுள்ளார். அது தொடர்பான தனது சமூக வலைதளப் பதிவில் பிரதமர் மோடியையும் கோர்த்துள்ளார்.

’உலகம் முழுவதும் பகவான் ஸ்ரீராமபிரானின் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை எதிர்பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெட்ஃபிளிக்ஸில் அன்னபூரணி என்ற இந்து எதிர்ப்பு திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ’இந்து பூசாரி ஒருவரின் மகள் அசைவ பிரியாணி சமைக்க நமாஸ் செய்கிறார்; பகவான் ஸ்ரீ ராமரும் இறைச்சி உண்பவர் என்று கூறி நடிகையை இறைச்சி சாப்பிடும்படி ஃபர்ஹான் என்பவர் வற்புறுத்துகிறார்; லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் காட்சிகள்… என வேண்டுமென்றே இந்தப் படத்தின் மூலமாக இந்து மத உணர்வுகளை புண்படுத்தி உள்ளார்கள்’ என தனது புகாரில் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
ரமேஷ் சோலங்கியின் புகார்

இவை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, நடிகை நயன்தாரா உட்பட 8 பேரை குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தனது புகாரில் சோலங்கி கோரியுள்ளார்.

திரையரங்கில் சுருண்ட அன்னபூரணி திரைப்படம், புதிய சர்ச்சைகள் காரணமாக ஓடிடி-யில் வெளியீட்டில் பெரும் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!