டிராபிக் போலீசுக்கே சவால் விடும் வகையில், கேரளாவின் பிரபாவதி என்ற பாட்டி துணிச்சலுடன் செய்த சம்பவம் SM-ல் வைரலாகி வருகிறது. கோழிக்கோட்டில் ஸ்கூட்டரை நடைபாதையில் ஓட்டி வந்தவரை தடுத்து, அவரை சாலையில் பயணிக்க வைத்த பாட்டியை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் கேரள போலீசார் பிரபாவதியின் வீட்டிற்கே நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து கெளரவித்துள்ளனர். அதன் வீடியோவையும் பகிர்ந்துள்ளனர்.
தில்’லான பாட்டியை தேடி சென்று கெளரவித்த போலீஸ்
