திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ரஞ்சனி (24), நல்லூர் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2022-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அவர், நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்கொலை செய்வதாக முன்பே பெண் போலீஸ் ஒருவரிடம் தெரிவித்ததால், கதவை உடைத்து மீட்டனர். மேலும், தற்கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
