பொங்கல் பரிசுத்தொகுப்பு… விடுப்பட்டவர்கள் 25ம் தேதி வரை பெறலாம்..

37
Spread the love

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும். இந்த ஆண்டு பொங்கல் பரிசில் ரூ. 2500 ரொக்கமும், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு போன்ற பொருள்கள் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இந்த பொருள்களை வாங்க ஜனவரி 13-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் புதிதாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு மாற்றப்பட்டவர்களுக்கு பொங்கல் பரிசு ஒதுக்கப்படாத நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளை முற்றுகையிட்டனர். இதனால் அவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் நோக்கில் பொங்கல் பரிசு தேதியை ஜனவரி 25 வரை நீடிக்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டது. 

இந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசு ரூ.5 ஆயிரத்து 604 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 235 ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும், 18,923 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. தற்போது இதில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும், புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசு இன்று முதல் ஜனவரி 25 வரை வழங்கப்பட உள்ளது. ஒரு நாளுக்கு தலா 100 அட்டைகள் வீதம் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY