Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல் நடிகை காலமானார்

மூத்த சீரியல் நடிகை வாஹினி (பத்மா) காலமானார்.வாஹினி கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மட்டுமின்றி, பொருளாதார சிக்கல்களையும் அவர் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது சிகிச்சைக்காக நண்பர்கள், கலைத் துறையை சேர்ந்தவர்கள் உதவி செய்த போதும், நோயின் தீவிரம் காரணமாக அவரை காப்பாற்ற முடியவில்லை.தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி, தமிழ் சின்னத்திரையிலும் அவர் நடித்த தொடர்கள் மூலம் குடும்ப ரசிகர்களிடம் பரிச்சயமான முகமாக மாறினார்.

நடிகை வாஹினியின் மறைவுச் செய்தியை அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான கராத்தே கல்யாணி சமூக வலைதளங்களில் உறுதி செய்தார். “வாஹினியை காப்பாற்ற கடைசி வரை முயன்றோம். மருத்துவர்கள் நிலைமை மோசமாக உள்ளது என கூறிய பின், அவரை ஊருக்கு அழைத்துச் சென்றோம். இப்போது அவர் இறைவனின் அடியில் அமைதியடைந்துள்ளார்” என கல்யாணி பதிவிட்டிருந்தார். சீரியல்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள், பார்வையாளர்களிடையே “நெகட்டிவ் ரோல்” என்றாலும், அவரது இயல்பான நடிப்பால் மனதில் பதிந்ததாக ரசிகர்கள் நினைவு கூர்கிறார்கள்.

error: Content is protected !!