Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பைக் விபத்தில் பவர் பிளாண்ட் ஊழியர் பலி

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் மாதவன் (19). இவர் மேலமருதூர் பகுதியில் உள்ள பவர் பிளாண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு துரைச்சாமிபுரம் – வேடநத்தம் சாலையில் தனது பைக்கில் மாதவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறியதில், பைக்குடன் சாலையோரத்தில் இருந்த ஓடைக்குள் விழுந்துள்ளார். ஓடைக்குள் அவர் காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!