Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.28 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 85 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 53.29 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 160.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து அதிகாலை 12.38 மணியளவில் (10 நிமிடம் இடைவேலியில்) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது. ரஷியாவின் கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடுத்துக்கொண்டு வீடுகளில் இருந்து வெளியில் ஓடினர்.  நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
error: Content is protected !!