Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரதமர் மோடி ஹூக்ளி நதியில் படகில் பயணம்

மேற்குவங்க மாநிலம் மாநிலம் கோல்கட்டாவிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அவர் ஹூக்ளி நதியில் படகில் பயணம் செய்தார் அவர், இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது:

இன்று காலை கோல்கட்டாவில், ஹூக்ளி நதிக்கரையில் சிறிது நேரம் செலவிட்டேன்; இது அன்னை கங்கைக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது.படகோட்டிகளைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது; அவர்களின் கடின உழைப்பு போற்றத்தக்கது. காலை நடைப்பயிற்சி செய்பவர்களையும் சந்தித்தேன். ஹூக்ளியில், மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மாபெரும் மேற்கு வங்க மக்களின் செழிப்புக்காகவும் உழைப்போம்.

ஹூக்ளி நதிக்கரையில் உண்மையிலேயே ஒரு மிகச் சிறப்பான காலைப் பொழுது அமைந்தது.இந்த மாபெரும் நதியைப் புகைப்படம் எடுக்க முயன்றேன். வித்யாசாகர் சேது மற்றும் ஹவுரா பாலத்தையும் அருகில் கண்டேன். ஒவ்வொரு மேற்குவங்க மாநில மக்கள் மனதிலும் கங்கை ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.

தெய்வீக நீர் ஒரு முழு நாகரிகத்தின், காலத்தால் அழியாத ஆன்மாவைத் தாங்கிச் செல்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

error: Content is protected !!