கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் தனியார் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே, பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் எனப் பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலத்தில் தனியார் பேருந்து விபத்து.. 15 பேர் காயம்
