மலையாள படங்களின் மூலம் அறிமுகமாகி, பின்னர் பல்வேறு மொழிகளில் பிரபலமான நடிகை பிரியா வாரியர், சமீபத்தில் ஒரு விளம்பர நிகழ்ச்சியில் காவி நிற உடையில் கலந்துகொண்டார். அப்போது, கேரளாவில் விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்சு அலர்ட் காரணமாக காவி உடை அணிந்துள்ளீர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த பிரியா வாரியர், ‘இந்த நிறுவனத்தின் பிராண்ட் நிறம் காவி, அதற்கேற்ப ஆடையை தேர்வு செய்தேன்’ என விளக்கமளித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
