Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை அருகே அரசு பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கிய ஆலங்குடி தொழிலதிபர்.

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திரா கோட்டையில் உள்ள ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் கன்சல்பேகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் பிரியா முன்னிலை வகித்தார்கள்.சிறப்புவிருந்தினராக ஆலங்குடி தொழிலதிபர் சசிகுமார் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியும், பள்ளி வளர்ச்சிக்காக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையினை வழங்கி மாணவர்களையும் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியையும் வாழ்த்திப் பேசினார். முன்னதாக தமிழ் ஆசிரியை வனிதா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு பேச்சாளராக ஜோதிசுந்தரேசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னாள் பள்ளி மாணவர்கள் அமைப்பின் தலைவர் பாலமுருகன், செயலாளர் செந்தில், உறுப்பினர்கள் பானுமதி, ராமநாதன், பகுருதீன், ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவியர்களின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.நிறைவாக பள்ளி மூத்த ஆசிரியர் சண்முகம் நன்றி தெரிவித்து பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!