Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சர்வதேச கராத்தே…. புதுகை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி சாம்பியன்

மலேசிய நாட்டைச் சேர்ந்த ஓகிநவா கோஜு கராத்தே பெடரேசன் என்ற அமைப்பு ஊட்டியில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டியை நடத்தியது. இந்தப் போட்டிகளில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தீஸ்வரன் பதினோறு வயதுப் பிரிவினருக்கான போட்டியில் இரண்டாம் பரிசும், லிங்கேஸ்வரன் பதின்மூன்று வயதினருக்கான பிரிவில் இரண்டாம் பரிசும், கலை செல்வா பதினான்கு வயதினருக்கான போட்டியில் இரண்டாம் பரிசும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ராஜேந்திர பிரசாத் புரோ மாஸ்டர் ஆப் கராத்தே விருதும் பெற்றதோடு ஒட்டுமொத்த  சாம்பியன்  பட்டத்தையும் பெற்றுள்ளனர். சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் துணை முதல்வர் குமாரவேல் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!