Skip to content
Home » பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்….

பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்….

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூரை தன்னிறைவு பெற்ற ஊராக மாற்றுவதற்கு மண்ணிண் மைந்தன் டத்தோபிரகதீஸ்குமார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார்.அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து பணிகளையும் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது.அதன் ஒருபகுதியாக தலைவாசலில் உள்ளது போல் பூலாம்பாடியில்  பெரிய அளவில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதோடு,ஊரின் வளர்ச்சிக்கு வருவாயும் கிடைக்கும் என்பதால் டத்தோ பிரகதீஸ்குமார் அவரது செலவில் செய்து தர தயாராக உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.பூலாம்பாடியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை

கோயம்பேட்டிற்கு அனுப்புவதற்கும் திட்டம் இருப்பதாககூறியிருந்தார்.இந்த நிலையில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் முன்பு டத்தோ பிரகதீஸ்குமார்தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் சேலம் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு காய்கறி சாகுபடி குறித்தும் காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினர்.

அதைத்தொடர்ந்து டத்தோ பிரகதீஸ்குமார் பேசும் போது காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் மானியங்கள் ஆகியவற் றை பெற்று தர தனது கம்பெனி செலவிலேயே பணியாளர் நியமிக்கப்படுவார்.விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துதரப்படும்.தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உங்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவர்.அனைவரும் ஒரே காய்கறிகளை பயிரிடாமல் வெவ்வேறு காய்கறிகளை பயிரிட்டால் லாபம் கிடைக்கும்.அக்டோபர் 25 ல் பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் திறக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் பூலாம்பாடி கடம்பூர் அரசடிக்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 500 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!