Skip to content
Home » பருப்பு விலை உயர வாய்ப்பு…. அரிசி விலை குறையும்….. நிபுணர்கள் கணிப்பு

பருப்பு விலை உயர வாய்ப்பு…. அரிசி விலை குறையும்….. நிபுணர்கள் கணிப்பு

ஆகஸ்டு மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை சராசரியைவிடக் குறைவாகப் பெய்ததால் பருப்பு விலை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைவாசி 37 சதவீதம் அதிகரித்ததன் காரணமாகத்தான் சில்லறைப் பணவீக்கம் 15 மாதங்கள் இல்லாத அளவில் கடந்த ஜூலையில் 7.5 சதவீதமாக அதிகரித்தது.

கடந்த ஜூலையில் 34.1 சதவீதம் விலை உயர்ந்த துவரம் பருப்பும், 9.1 சதவீதம் விலை உயர்ந்த பாசிப்பருப்பும் இனி மேலும் விலை உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.  நடப்பு காரிப் பருவத்தில் 114.9 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டாலும், போதிய மழை இல்லாததால் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது எனக் கூறுகின்றனர்.  அதேவேளையில் அரிசி உள்ளிட்ட தானியங்கள் பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் விகிதம் கடந்த சில வாரங்களுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. இதனால் அரிசி, தானியங்கள் விலை வரவிருக்கும் காலத்தில் குறையும் என்று கணித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!