Skip to content
Home » கடவுளின் தூதர் மோடி என்றால்.. கொரோனாவை விரட்ட லைட் அடிக்க சொன்னது ஏன்?

கடவுளின் தூதர் மோடி என்றால்.. கொரோனாவை விரட்ட லைட் அடிக்க சொன்னது ஏன்?

சமீபத்தில் பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளித்த பிரதமர் மோடி, தான் கடவுளால் அனுப்பப்பட்ட இறைத் தூதன் என்று உணர்ந்ததாகத் தெரிவித்தார். லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த பேட்டியில் பிரதமர் மோடி கூறுகையில், “என் அம்மா உயிருடன் இருக்கும் வரை,​​நான் அவரது மகன்தான் என்று நான் நம்பினேன்.. ஆனால், அவர் இறந்த பிறகு, எனது அனைத்து அனுபவங்களையும் நினைத்துப் பார்க்கையில்.. கடவுள் தான் என்னை அனுப்பினார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  எனக்குள் இருக்கும் எனர்ஜி என் உடலில் இருந்து இருக்க முடியாது.. கடவுளால் எனக்கு வழங்கப்பட்டது என்றே நினைக்கிறேன். கடவுள் ஒரு நோக்கத்திற்காகவே எனக்கு இந்த திறன்கள், உத்வேகத்தைக் கொடுத்துள்ளார் என்று நான் நம்புகிறேன்… நான் ஒரு கருவியைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், பிரதமர் மோடி பேச்சுக்குப் பதிலடி கொடுத்துள்ள ராகுல் காந்தி, “நரேந்திர மோடி தனது நேர்காணலில் தன்னை இறைத் தூதர் என்கிறார். இந்த விஷயத்தை வேறு யாராவது ஒருவர் சொல்லி இருந்தால்.. அவர் நேராக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டிருப்பார். ஆனால் இதைக் கேட்டு அவரது ஆதரவாளர்கள், ஆஹா கடவுளே அவரை நம் பிரதமராக அனுப்பியிருக்கிறார்கள் எனப் புல்லரித்துப் போகிறார்கள். கொரோனா சமயத்தில் இந்தியர்கள் கங்கை கடற்கரையில் இறந்து கிடந்தனர்.. பல ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார்கள்.. ஆனால் கடவுளால் அனுப்பப்பட்ட இந்த இறைத் தூதன் உங்கள் மொபைல் ஃபோன் டார்ச் லைட்டை அடியுங்கள் என்றாரே.. அது அனைவருக்கும் நினைவு இருக்கும்”  என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!