திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் திண்டுக்கல் பிரியாணி என்கிற பெயரில் சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளை ஆக்கிரமித்து நடத்தப்பட்டும் பிரியாணி கடை குறித்தும் etamilnews.com ல் பல முறை செய்தி வெளியிட்டு வந்தோம். குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனின் வாசலில் உள்ள திண்டுக்கல் பிரியாணி கடைகள் ரயில்வேக்கு சொந்தமான இடத்திலேயோ, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலேயோ இல்லை என்றும் அந்த கடைகள் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு என etamilnews செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் சில அதிகாரிகள் திண்டுக்கல் பிரியாணி கடையினருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டி வந்தனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிடம் கேட்டதற்கு திண்டுக்கல் பிரியாணி நடத்தப்படும் கடைகள் அனைத்தும் பர்மா அகதிகளுக்கு வழங்கப்பட்டவை என்றும் காலப்போக்கில் பர்மா அகதிகளின் வாரிசு தாரர்களிடம் இந்த கடைகளை உள்வாடகைக்கு வாங்கிய நபர்கள் ஆக்கிரமித்து பிரியாணி கடை நடத்தி வருவதாக கூறினர். 
