Skip to content
Home » ரஜினியை ஆர்வத்துடன் சந்தித்த கேரளா ரஜினி ரசிகர்கள்…

ரஜினியை ஆர்வத்துடன் சந்தித்த கேரளா ரஜினி ரசிகர்கள்…

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சுனில், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் உட்பட பல நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர்.

இந்த படம் வசூல் & விமர்சன ரீதியாக அமோக வெற்றியை அடைந்தது. இதனால் படத்தயாரிப்பு குழு படக்குழுவினருக்கு கார் உட்பட பல்வேறு பரிசுகளை வழங்கியது.

அதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் ஸலாம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார். லைகா தயாரித்துள்ளது. விஷ்ணு விஷால், விதார்த் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதனையடுத்து, இயக்குனர் டிஜெ ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத்

இசையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 170 திரைப்படம் உருவாகிறது.

இப்படத்திற்கான பூஜைகள் நிறைவுபெற்று, முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்தை ஆர்வத்துடன் சந்தித்த கேரளா ரஜினி ரசிகர்கள் சந்தித்தனர். மேலும் ரஜினியுடன் செல்பி எடுத்துக்கொண்டார.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!