மறைந்த தயாரிப்பாளர் RB சவுத்ரி உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், RB சவுத்ரி அருமையான மனிதர் என்றார். பல புது இயக்குநர்களை அவர் உருவாக்கியுள்ளார். அவர் தயாரித்த 99 படங்களிலும் பெரியளவில் பிரச்னை வந்ததே இல்லை எனவும் ரஜினி குறிப்பிட்டார். RB சவுத்ரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.

