Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

11வது நினைவு தினம்…….ராமஜெயம் படத்திற்கு அமைச்சர் நேரு மாலை…

நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக  முதன்மைச் செயலாளரும்மான  கே என் நேருவின்   சகோதரரும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின்  11 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி   சென்னையில் உள்ள அமைச்சர் நேரு  இல்லத்தில் , ராமஜெயம் படத்திற்கு அமைச்சர்கள் நேரு, மகேஷ், திமுக எம்.எல்.ஏக்கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன்,  மதுரை தளபதி, சேலம் ராஜேந்திரன், மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் உள்ள ராமஜெயம் சிலை இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த சிலையின் பீடத்தில் ராமஜெயம் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கும், அந்த புகைப்படத்திற்கும்  அமைச்சர் நேருவின் சகோதரர்  கே.என். ரவிச்சந்திரன், மகன் அருண் நேரு, திருச்சி மேயர் அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, திருச்சி மாவட்ட கூடுதல்   அரசு வழக்கறிஞர் பாஸ்கரன், காஜாமலை விஜய்,  துரைராஜ்,  மற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!