Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிறை தென்பட்டதால் இன்று ரம்ஜான்… தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு

ஏப்ரல் 9 பிறை தென்படாததால் தமிழகம், புதுவையில் ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் பிறை தென்பட்டதாகவும் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 10 (இன்று) கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஏற்கனவே பிறை தென்படவில்லை என்று அறிவிப்பு செய்திருந்தோம். இந்த நிலையில் கோவை – சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி – வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக செய்தி வந்தது. அதை சற்று முன் விசாரித்து உண்மை என்று உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்கண்டவாறு பிறை அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிடுகிறது. பிறை தேட வேண்டிய நாளான 09. 04. 2024 செவ்வாய்க் கிழமையன்று தமிழகத்தின் கோவை – சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி – வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 09. 04. 2024 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகிறது என்பதையும் 10. 04. 2024 புதன்கிழமை நோன்பு பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்”  என குறிப்பிடப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!