Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் கஞ்சா கும்பலின் அட்டகாசம்- வீலிங் செய்து ரகளை

கோவையில் கஞ்சா கும்பலின் அட்டகாசம்- வீலிங் செய்து ரகளை

கோவை, பீளமேடு பகுதியில் நள்ளிரவு நேரங்களில் கஞ்சா மற்றும் மதுபோதையில் மிதமிஞ்சிய வேகத்தில் பைக்குகளை ஓட்டி, வீலிங் (Wheeling) சாகசங்கள் செய்து ரகளையில் ஈடுபட்டு வரும் மாணவர் கும்பலால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்து உள்ளனர்.

கோவை, பீளமேடு புதூர், திருமகள் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்புச் சாலைகளில், கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் கஞ்சா மற்றும் மதுபோதையில் திரழும் சில கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக அட்டகாசம் செய்து வருகின்றனர்.

​அப்பகுதியைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் குடியிருப்பாளர்கள் கூறும்போது, தினமும் இரவு நேரங்களில் கஞ்சா அடித்துக் கொண்டு வரும் இளைஞர்கள், எவ்வித பதிவெண்ணும் (Number Plate) இல்லாத இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வீலிங் செய்தவாறும், நள்ளிரவில் உரக்கக் கூச்சலிட்டவாறும் உலா வருகின்றனர்.
​
நேற்று இரவு சுமார் 11 மணி அளவில், போதை ஆசாமிகள் சிலர் வழக்கம்போல் பதிவெண் இல்லாத பைக்கில் அதிவேகமாக வந்து வீலிங் சாகசம் செய்ய முயன்று உள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் தலைகுப்புறக் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. போதையில் இருந்த இளைஞர்கள் கீழே விழுந்த பின்னரும் தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் நடந்து கொண்டு உள்ளனர்.
​
நள்ளிரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளில் அதிவேகமாக பைக் ரேசிங் மற்றும் வீலிங் சாகசங்களில் ஈடுபடும் இந்த போதை கும்பலால், சாலையில் நடந்து செல்லவோ அல்லது நிம்மதியாக உறங்கவோ முடியாமல் அஞ்சுவதாகக் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
​எனவே, பீளமேடு புதூர் திருமகள் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் குடியிருப்புப் பகுதிகளில் பீளமேடு காவல் துறையினர் இரவு நேர ரோந்துப் பணியைத் (Night Patrolling) தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பதிவெண் இன்றி சுற்றும் பைக்குகளைப் பறிமுதல் செய்து, கஞ்சா போதையில் ரகளை செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

error: Content is protected !!