5ம் வகுப்பு மாணவியை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில், திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த வித்யாதரன் நாயர் (47) என்பவருக்கு விரைவு போக்சோ நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி கே.எம். சுஜா இந்தத் தீர்ப்பை வழங்கினார். அபராதத்தைக் கட்டத் தவறினால் கூடுதலாக மூன்றரை ஆண்டுகள் சிறை அனுபவிக்க வேண்டும். மேலும், இக்கொடுமையை அறிந்தும் மறைத்த மற்றொருவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மாணவி தொடர் பலாத்காரம்.. 47 வயது நபருக்கு 30 ஆண்டு சிறை
