Skip to content
Home » ரயில் விபத்தை தடுத்த தம்பதி…. ரயில்வேயும் வெகுமதி வழங்கி பாராட்டு…

ரயில் விபத்தை தடுத்த தம்பதி…. ரயில்வேயும் வெகுமதி வழங்கி பாராட்டு…

  • by Senthil

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை எஸ் வளைவு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த சம்பவத்தின்போது, அந்த வழியாக வந்த சிறப்பு ரயிலை லைட் அடித்து நள்ளிரவு நேரத்தில் நிறுத்தி பெரும் விபத்தை தடுத்த சண்முகையா – வடக்குத்தி அம்மாள் தம்பதியினரை, பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

அரசியல் பிரமுகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அவர்களது சாமர்த்திய செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த தம்பதியினரை நேரில் அழைத்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து, இன்று தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தபா, தெற்கு ரயில்வே மகளிர் நல அமைப்பு (SRWWO) சேர்மன் பிரியா கிஷார் அகர்வால் ஆகியோர் தென்காசி, செங்கோட்டை அருகே உள்ள பகவதிபுரம் ரயில் நிலையத்திற்கு சண்முகையா மற்றும் அவரது மனைவியை அழைத்து, பெரிய அளவிலான விபத்தை தடுத்த தம்பதியினருக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு ரயில்வே துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி அறக்கட்டளையில் இருந்து தென்காசி தம்பதியினருக்கு 1 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!