Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் தனுஷின் “ஓம்” ரிலீஸ்.. ரசிகர்கள் கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கோவை: நடிகர் தனுஷின் O.M திரைப்பட வெளியீட்டை பட்டாசு வெடித்து ஆடல் பாடல் என ரசிகர்களும் தனுஷ் நற்பணி இயக்கத்தினரும் கொண்டாடினர்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் மம்முட்டி

சாய் பல்லவி உள்ளிட்ட எண்ணற்ற நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகி உள்ள O.M திரைப்படம்

இன்று திரையரங்குகளில் வெளியானதை ரசிகர்களும் தனுஷ் நற்பணி இயக்கத்தினரும் கோலாகலமாக கொண்டாடினர்.

தமிழக அரசு இனி 6 மணி காட்சிக்கு அனுமதி அளித்துள்ளதால் தமிழகத்தில் பல்வேறு

திரையரங்குகளில் 6 மணிக்கு இந்த திரைப்படம் வெளியானது. இதனை ரசிகர்களும் தனுஷ் நற்பணி இயக்கத்தினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

கோவை மாவட்டத்தில் காந்திபுரம் பகுதியில் உள்ள கங்கா திரையரங்கில் தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது டிஜே நிகழ்ச்சி ஆடல் பாடல் என கோலாகலமாக அனைவரும் கொண்டாடினர். பட்டாசு வெடித்தும் ஒரே மாதிரியான டீசர்ட் அணிந்தும் தனுஷ் கட் அவுட்க்கு பால் அபிஷேகம் செய்தும் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

நீண்ட நாள் கழித்து தனுஷ் திரைப்படம் அதிகாலை காட்சி வெளியானது அவரது ரசிகர்கள் மத்தியிலும் குறிப்பாக தனுஷ் நற்பணி இயக்கத்தினர் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!
Secret Link