Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சீரான பேருந்து சேவை- அரியலூர் கலெக்டர் அரசு பஸ்சில் பயணித்து ஆய்வு

சீரான பேருந்து சேவை- அரியலூர் கலெக்டர் அரசு பஸ்சில் பயணித்து ஆய்வு

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரியலூர் அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரியலூர் இரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள், மாணவ, மாணவிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பயணிகள் எளிதாகவும், பாதுகாப்பாகவும், உரிய நேரத்திலும் சென்றடையும் வகையில் சீரான பேருந்து சேவையை மேம்படுத்துவது தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி இன்றையதினம் அரசுப் பேருந்தில் நேரடியாக பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இரயில்வே நிலையம் செல்லும் சாலைகளில் சில இடங்களில் சாலையோரங்களில் வாகனங்கள்

நிறுத்தப்படுவதாலும், ஆக்கிரமிப்புகளாலும் பேருந்துகள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இயக்கப்படுவதில் சிரமங்கள் ஏற்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி பார்வையிட்டு பேருந்துகள் எவ்வித இடையூறும் இன்றி சீராக இயக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், சாலைகளின் இருபுறங்களிலும் அமைந்துள்ள மூடிய கழிவுநீர் கால்வாய்களில் சேதமடைந்துள்ள பகுதிகளை உடனடியாக சீரமைத்து தேவையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பேருந்துகளின் சீரான இயக்கத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பேருந்துகள் திருப்பம் எடுக்கும் பகுதிகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அதிக போக்குவரத்து காணப்படும் இடங்களில் தேவையான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், அனுமதியற்ற வாகன நிறுத்தங்களைத் தடுக்க தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள், மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் இரயில் பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி விரைவாகவும் பாதுகாப்பாகவும் சென்றடையும் வகையில் தொடர்ந்து சீரான பேருந்து சேவை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அறிவுறுத்தினார்.

முன்னதாக கடந்த 15.07.2026 அன்று உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கான கழிவறை கட்டடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்படி பொதுமக்களுக்கான கழிவறை கட்டடங்களில் தேவையான பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதை இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்ந ஆய்வின் போது அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, அரியலூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார், போக்குவரத்து துறை அலுலவர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!