Skip to content
Home » பத்திரிகையாளர்களின் பெருமைமிகு தலைவர் கலைஞர்…. பிரபல நிருபர் சேகர்

பத்திரிகையாளர்களின் பெருமைமிகு தலைவர் கலைஞர்…. பிரபல நிருபர் சேகர்

  • by Senthil

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி  முரசொலி நாளிதழ் இன்று  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியிட்டு உள்ளது. அதில் கலைஞர் கருணாநிதியுடன் நீண்ட  நெடிய தொடர்பில் இருந்தவர்கள் அவரது நினைவை போற்றும் வகையில் பல தகவல்களை  தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் டெக்கான் கிரானிக்கல்  என்ற ஆங்கில பத்திரிகையின்  நிருபராக பணியாற்றுபவர் டி.சேகர். இவரை நிருபர் சேகர் என்றால் பலருக்கு தெரியாது. அறிவாலயம் சேகர் என்றால் தான் தெரியும். அந்த அளவு கலைஞரோடு  மிக நெருக்கமான பத்திரிகையாளர்களில் ஒருவர் சேகர். இவரும் கலைஞர் பற்றிய தனது அனுபவங்களை அந்த சிறப்பு மலரில்  பத்திரிகையாளர்களின் பெருமைமிகு துணைவர் என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.  அதனை இங்கே காணலாம்.

முதல்வராக இருந்தாலும் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தாலும் அவரைப் பற்றிய செய்தி இல்லாமல் எந்த நாளிதழோ. வார இதழோ வெளிவந்தது இல்லை. ஒன்று, அவ ரைப் பாராட்டிய செய்தியாக இருக்கும். அல்லது அவரை கடுமை யாகத் தாக்கியோ அல்லது விமர் சித்தோ வந்த செய்தியாக இருக்கும். கலைஞர் பேட்டி என்றால் பத்திரி கையாளர்கள் மகிழ்ச்சியுடன் பெரு மளவில் திரண்டு வருவார்கள்.

அவரது பேட்டி இன்றைய தலைப் புச் செய்தியாக இருக்கும் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம், புள்ளி விவரங்களுடன் அடுக்கடுக் காக ஆதாரங்களை அள்ளித் தருவார்.

திருமண விழாவை நடத்தி வைத்துப் பேசினாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்பதால் பத்திரிகையா ளர்கள் திரண்டு இருப்பது நிச்சயம். மேடையில் பேசும் போது என்றாலும் சரி. பேட்டி தரும் போது என்றாலும் சரி. சட்டமன்றத்தில் பேசும் போது என்றாலும் சரி. நிரு பர்கள் நோட்டுப் புத்தகத்தில் எழுதும் வேகத்துக்கு ஏற்ப நிறுத்தி. நிதானமாக, புள்ளி விவரம் என்றால் மீண்டும் ஒரு முறை குறிப்பிடுவார். செய்தி தவறாக வெளிவந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பார்.

பேட்டியின் போது வரும் செய்தியாளர் ஒவ்வொருவரையும் அவரது பெயர், பத்திரிகை போன்ற விவரத்தை அறிந்து கொள்வார். தவறாக வந்தால் அடுத்த முறை பார்க்கும் போது அன்புடன் கடிந்து கொள்வார். பத்திரிகையாளர்கள் அண்ணா அறிவாலயத்திலோ அல்லது தலைமைச் செயலகத்திலோ கலைஞரிடம் கருத்து. அல்லது ரியாக்சன் கேட்க நம்பிக்கையுடன் திரண்டு இருந்தால் எவ்வளவு அவசரம் என்றாலும் நின்று. ‘என்னய்யா?’ என்று கேட்டு செய்தி அல்லது கூட்டத்தின் முடிவைத் தெரிவித்து விட்டுதான் காரில் ஏறுவார். செய் தியாளர் களுக்கு ஏமாற்றம் இருக்காது.

ஒவ்வொரு பத்திரிகையாளரிடமும் நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கெண்டு பேசுவார், பத்திரி கை யாளர்கள் ஒரு பிரச்சினை பற்றிக் கூறினால் பொறுமை யுடன் கேட்பார். தீர்வும் காண்பார்.  தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்கள் நிலை 50 ஆண்டுகளுக்கு முன்பு மிக மோசமாக இருந்தது. பணிப் பாதுகாப்பு. போதிய ஊதியம் இன்றி அவதிப் பட்ட காலம் அது. வீட்டு வாடகை தர முடியாமல் பலர் சிரமப்பட்டனர்.

இதை அறிந்ததும் அரசு குடியிருப்புகளில் மிகக் குறைந்த வாடகையில் பத்திரிகையாளர்கள் குடியி ருக்கும் வகையில் வீடு களை ஒதுக்கித் தர கலைஞர் உத்தர விட்டார். பத்திரிகையாளர் களுக்கு அரசு மருத்துவம் னைகளில் சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டார். அவர் வழியில் தொடர்ந்து ம் செயல்பட்டு வரும் இன்றைய முதல்வர் தளபதி அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு உதவிகளை வாரி வழங்கி யும் வருகிறார். முன் களப் பணியாளர்களாக பத்திரிகையா ளர்களை அறிவித்ததுடன். வருவாய் உச்ச வரம்பின்றி முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற வழிவகை செய்தார்.

பத்திரிகையாளர்களுக்கு சொந்த வீடு கேட்டு அணுகிய போது 1996 ல் கலைஞர் சென்னையின் மையப் பகுதியான கொட்டிவாக்கத்தில் பத்தி ரிகையாளர் குடியிருப்புக்கு இடம் ஒதுக்கித் தந்து ரூபாய் 20 லட்சம் மானியமும் அறிவித்தார். பத்திரிகையாளர் காலனி என்ற பெயருடன் அங்கு  வீடுகள் கட்டி 136 குடும்பங்கள் சொந்த வீட்டு வசதியுடன் மகிழ்ச்சியுடன் வசித்து வருகிறார்கள். அதே போல அனைத்து மாவட்டங்களிலும் பத்திரிகை யாளர்கள் குடியிருக்க இடம் ஒதுக்கித் தர உத்தரவிட்டார். அது மட்டுமல்ல. பத்திரிகையாளர்கள் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்தால் குடும்ப நிதி உதவித் திட்டத்தை (ரூபாய் 25 ஆயிரம்)யும் 1997 ல் கலைஞர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து 1998 ல் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தையும் அறிவித்தார்.

சென்னை அரசினர் தோட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் இடம் ஒதுக்கித் தந்து 50 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருவது சென்னை நிருபர்கள் சங்கம். அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட கலைஞர் முடிவு செய்ததும், பத்திரிகையாளர்கள் கலை ஞரை அணுகி மாற்று இடம் கேட்டார்கள். சற்றும் யோசிக்காமல் தற்போதைய பிரஸ் கிளப் அருகில் ரூபாய் 39 லட்சத்தில் எழில்மிகு புதிய கட்டிடம் கட்டித் தந்தவர்தான் கலைஞர்.

ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஒருவருடன் கலைஞர் நல்ல நட்பு வைத்து இருப்பதுடன் அவ்வப்போது நாட்டு நடப்பை அறிந்து கொள்வார்.  கலைஞரிடம் தெளிவாகக் கேள்வி கேட்பது அவசியம் .

தேர்தல் சுற்றுப்பயணம். பொதுக்குழு, செயற் குழுக் கூட்டம் அல்லது மாநாடு என்றால் அதில் அகில இந்தியப் பத்திரிகைகளின் பிரதிநிதிகள். வானொலி. தொலைக்காட்சி நிருபர்கள். முக்கிய நாளிதழ்களின் நிரு பர்கள் பங்கேற்று இருப்பதை உறுதி செய்து கொள்வார். பத்திரிகையாளர்கள் செய்தி தருவதற்கு வசதியாக இருக்கும் வகையில் மாலை பத்திரிகை மற்றும்
வானொலிக்காக பத்திரிகையாளர்கள் சந்திப்பை பிற்பகல் 1 மணிக்குள் நடத்தி முடிப்பார். அதேபோல காலை நாளிதழ்கள் நியூஸ் ஏஜென்சிகள் வசதிக்காக பொதுக்கூட்டம் அல்லது விழாவில் இரவு 10 மணிக்குள் பேசி முடித்து விடுவார்.தேர்தல் சுற்றுப் பயணத்தின் போதும் இதைப் பின்பற்றுவார். தனது வாழ்நாள் முழுவதும் தலைப்புச் செய்தியாகத் திகழ்ந்த கலைஞர் அவர்கள் சிறந்த அரசியல் தலைவராக மட்டுமல்ல; பத்திரிகையாளர்களின் பெருமைமிகு நண்பராகவும், துணைவராகவும் திகழ்ந்தார் எனின் அது மிகையல்ல!.  அவர் காலத்தில் பத்திரிகையாளராக பணியாற்றிய ஒவ்வொருவரும் பெருமை கொள்வார்கள் என்பதில் சிறிதும் அய்யம் இல்லை!

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!