Skip to content

பட்டுக்கோட்டை அருகே பள்ளியில் புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன் கோட்டை ஊராட்சியில் செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளாகியும் புதிய கட்டிடம் கட்டித் தரவில்லை என்றும் மாணவ மாணவிகள் நலன் கருதி புதிய கட்டிடத்தை விரைந்து கட்டித் தர அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பொன்னவராயன் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , 11-6-1957 இல் கட்டப்பட்ட பள்ளிக்கூடம் ஆகும். இந்தப் பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு

கட்டிடங்கள் பழுது அடைந்ததாக கூறி இடிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகியும், இதுவரை பள்ளிக்கூடத்திற்கு புதிய வகுப்பறைகள் கட்டி தரபடவில்லை,

பள்ளிக்கூடத்திற்கு புதிய வகுப்பறைகள் கட்டு தர வேண்டும் என்று கிராம சபா கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியும், இன்று வரை கட்டித் தரவில்லை என்றும், பள்ளியில் சுமார் 83 மாணவ, மாணவிகள் படித்து வந்த நிலையில், தற்பொழுது பள்ளி கட்டிடம் இல்லாத காரணத்தால் பள்ளிச் சான்றிதழை வாங்கிக் கொண்டு பட்டுக்கோட்டை நகராட்சி பள்ளியில் சென்று சேர்ந்துவிட்டனர். தற்பொழுது 67 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

மாணவர்கள் கல்வி பயில போதுமான வகுப்பறை கட்டிடம் இல்லாத காரணத்தால் உடனடியாக இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்களை கட்டி தர வேண்டும் என ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பலமுறை முறையிட்டும் நிதி பற்றாக்குறை காரணத்தால் நிதி இல்லை என்று கூறுவதாக அந்த கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மீதமுள்ள பள்ளி மாணவ மாணவிகளும் போதிய வகுப்பறை வசதியின்றி படிப்பதற்கு ரொம்ப சிரமப்படுகிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களின் நலன் கருதி விரைந்து புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!