Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆளுக்கு ஒரு கிலோ…. சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை அமோகம்

தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தக்காளி விற்பனை தொடங்கியது.  சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என பிரித்து தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதலில் வரும் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தக்காளி விற்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரேஷன் கடைகளில் தக்காளி பெற எந்த கட்டுப்பாடும் இல்லை; குடும்ப அட்டையை காண்பிக்க தேவையில்லை. மக்கள் அருகில் உள்ள தக்காளி விற்கப்படும் எந்த ரேஷன் கடைக்கும் சென்று பணம் கொடுத்து தக்காளி வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!