கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொன்மலை பட்டியில்
பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து
அதிகாரிகள்அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
திருச்சி மாநகராட்சி பொன்மலைப்பட்டி 46 வது வார்டு கொட்டப்பட்டு ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உயர்நிலை தண்ணீர் தொட்டி(வாட்டர் டேங்க்) அருகில் அப்பகுதி பொதுமக்களுக்காக பூங்காவிற்கு இடம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் மூன்று வருடத்திற்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அந்தப் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப் போவதாக மாநகராட்சி அதிகாரிகள் வந்து அங்கு வேலையை தொடங்கினர். அப்போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் அப்பகுதி மக்கள் இந்த இடத்தில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடம் அதனால் இந்த இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வரக்கூடாது என்றும், மேலும் இந்த பகுதியில் அதிக துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறும் என்றும், இது சம்பந்தமாக அந்த பொதுமக்களில் மூன்று பேர் தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் அடிப்படையில் கடந்த மூன்று வருடமாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வழக்கு தொடுத்த மூன்று நபர்களில் ஒரு நபரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை அந்த பகுதியில் மீண்டும் பணிகளை தொடங்குவதற்காக ஆய்வு செய்ய வந்துள்ளனர். அப்பொழுது அங்கு கூடிய பகுதி பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் பொழுது நீங்கள் எப்படி மீண்டும் வேலையை தொடங்குவீர்கள் என்று அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் திரும்ப சென்றனர். மீண்டும் மாலை பொன்மலை போலீஸ் ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் போலீசார் உடன் அங்கு வந்து ஆய்வு செய்ய வந்த பொழுது பொதுமக்கள் மீண்டும் அங்கு கூடி அவர்களிடம் நீங்கள் எப்படி மீண்டும் வேலையை தொடங்குவீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வழக்குகள் தள்ளுபடி ஆகிவிட்டது. அதனால் நாங்கள் வேலையை தொடங்குகிறோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதற்கு பொதுமக்கள் கூறும் பொழுது ஒருத்தருடைய மனு மட்டும் தான் தள்ளுபடி ஆகி இருக்கிறது. மீதி இரண்டு பேர் மனு விசாரணையில் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் எதை வைத்து கூறுகிறீர்கள் என்று வாக்குவாதம் முற்றியது மேலும் அப்ப பகுதி பொதுமக்கள் வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது என்றால் அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என்று கூறியுள்ளனர் நாங்கள் காட்ட முடியாது என்று அவர்கள் பதில் கூறியுள்ளனர். மேலும் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் மகேந்திரன் அவர்களிடம் வேலையை தொடங்குவதற்கு வழிவிடுங்கள் இல்லையென்றால் உங்கள் மீது வழக்கு பதிவேன் என்று கூறியுள்ளார். இதனால் மேலும் வாக்குவாதம் முற்றியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு
சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்கள் அனைவரும் கனலந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
