9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும் கருணை அடிப்படை பணி நியமத்திற்கான உச்சவரம்பை ஏற்கனவே இருந்ததைப் போன்று 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் அனைத்து காலி பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். இந்நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
