சென்னை கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.220 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.250-ஐ தாண்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. சின்ன வெங்காயத்தைத் தொடர்ந்து பூண்டு விலையும் கிலோ ரூ.230 முதல் ரூ.320 வரை விற்பனையாகிறது. சமையலுக்கு அத்தியாவசியமான இந்த இரண்டு பொருட்களின் விலையும் ஒரே நேரத்தில் கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகளும் பொதுமக்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சின்ன வெங்காயம், பூண்டு விலை உயர்வு- இல்லத்தரசிகள் ஷாக்
