Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் வழங்கிய சக போலீசார்

தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2009ம் ஆண்டு காவலராக தேர்வாகி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த 31.12.22 ம் தேதி அன்று அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அரவக்குறிச்சியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பணிபுரிந்து வரும் ஆண் காவலர்கள் மற்றும்

பெண் காவலர்கள் சார்பாக விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, 24 லட்சத்து 30 ஆயிரத்து 943 ரூபாயை நிதி திரட்டி நன்கொடை வழங்கிய நிகழ்ச்சி சக காவலர்கள் மற்றும் கரூர் வட்டார பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!