Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் விபத்து ஏற்படும் அபாயம்…

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொது மக்களை தூரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை தூரத்தி செல்வதால் வாகன ஓட்டுனர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் தஞ்சை ரெட்டிபாளையம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக வாகனப் போக்குவரத்தில் மிகுந்த இடையூறுகள் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் கால்நடைகள் சாலை நடுவே படுத்துக்கிடக்கின்றன. எனவே அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!