Skip to content
Home » பரபரப்பான டி20…….2வது சூப்பர் ஓவரில் ஆப்கனை வீழ்த்திய இந்தியா….. ரோகித்தின் சாதனைகள்

பரபரப்பான டி20…….2வது சூப்பர் ஓவரில் ஆப்கனை வீழ்த்திய இந்தியா….. ரோகித்தின் சாதனைகள்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் அடிக்க ஆட்டம் சமன் ஆனது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

முதலில்  சூப்பர் ஓவர் ஆடிய ஆப்கானிஸ்தான் 1 விக்கெட்டை இழந்து  16 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணியும் 1 விக்கெட்டை இழந்து 16 ரன்கள் மட்டுமே எடுத்து சமன் செய்தது. இதனால் வெற்றி, தோல்வியை தீர்மானிக்க 2வது சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய இந்தியா  2விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய ஆப்கன்,  2 விக்கெட்டுகளையும் இழந்து 1 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஆட்டத்தில் சதமடித்து அசத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார். மேலும் இந்த போட்டியில் பல சாதனைகளை ரோகித் படைத்துள்ளார்.

அவைகள் விவரம் வருமாறு:

* 1. ரோகித் இந்த போட்டியில் அடித்த 121 ரன்களையும் சேர்த்து இந்திய அணியின் கேப்டனாக அவர் இதுவரை 1647 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள ரோகித்  புதிய சாதனை படைத்துள்ளார்.

‘ *அந்த பட்டியல்: * 1. ரோகித் சர்மா : 1647 2. விராட் கோலி : 1570 3. எம்எஸ் தோனி : 1112 2.

அது மட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் உடைத்துள்ள ரோகித்  புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

*அந்த பட்டியல்: * 1. ரோகித் சர்மா : 36 வருடம் 272 நாட்கள் 2. விராட் கோலி : 33 வருடம் 307 நாட்கள் 3.

சூரியகுமார் யாதவ் : 33 வருடம் 91 நாட்கள்.

3. ரோகித் சர்மா இதுவரை டி20 கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்துள்ளார். இந்த 5 சதங்களில் 3 சதங்களை அவர் கேப்டனாக பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த கேப்டன் என்ற பாகிஸ்தானின் பாபர் அசாம் உலக சாதனையையும் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

4. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற உலக சாதனையையும் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

*அந்த பட்டியல்:* 1. பாபர் அசாம்/அஸ்கர் ஆப்கன்/இயன் மோர்கன்/பிரையன் மசாபா/ரோகித் சர்மா: தலா 42 2. எம்எஸ் தோனி; 41 3. ஆரோன் பின்ச் : 40

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!