மனைவியை சூடு வைத்து சித்தரவதை செய்த ரவுடி கைது
திருச்சி துறையூர் மருக்களாம் பட்டி கட்டணாமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 46). இவர் தனது மூத்த சகோதரியின் மகளான லாவண்யா (29 )என்பவரை கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
விநாயகமூர்த்தி ஜம்புநாதபுரம் காவல் நிலைய ரவுடி பட்டியலில் உள்ளார் இந்த நிலையில்
சமீபகாலமாக கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஆத்திரமடைந்த விநாயகமூர்த்தி மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிச் தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த முயற்சி பலிக்காததால் இஸ்திரி பெட்டியால் சூடு வைத்து சித்தரவதை செய்து வந்துள்ளார் மேலும் துணியால் கழுத்தை நெரித்து அவரைத் கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட லாவண்யாவை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து லாவண்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் விநாயகமூர்த்தியை ஜம்புநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது கொலை முயற்சி பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
தொட்டியம் சீனிவாசநல்லூர் சித்தூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்( 46) சென்ட்ரிங் தொழிலாளி. இவர் குடிபோதையில் அங்குள்ள சித்தூர் பெரிய வாய்க்காலில் தவறி விழுந்தார். அடுத்த நொடி அவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. பின்னர் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் தேஜீத் தொட்டியம் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பழ வியாபாரியிடம் மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
திருச்சி மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வமணிவயது 35. இவர் வாகனத்தில் சென்று பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார் .சம்பவத்தன்று எஸ் ஐ டி ஜங்ஷன் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகளான இருளாண்டி என்ற முத்து இருளாண்டி 40 குஜிலி ரங்கநாதன்37 ஆகிய 2 பேரும் செல்வமணியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருளாண்டி மற்றும் ரங்கநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் விற்ற 3பேர் கைது
திருச்சி எஸ் ஐ டி ஜங்ஷன் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு புகையிலைப் பொருட்களை விற்றுகொண்டிருந்த திருச்சி காட்டூர் எல்லக்குடி பகுதி சேர்ந்த ஆரோக்கிய மேரி வயது 56 என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையம் அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக ரங்கா நகரைச் சேர்ந்த நாச்சியாயி 60 என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். உறையூர் மண்டை பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக திருச்சி மல்லிகைபுரம் பகுதியைச் சேர்ந்த அடைக்கலம் வயது 45 என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 3.5 கிலோபுகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய் 2000 பறிமுதல் செய்யப்பட்டது.
பதுக்கி வைத்து மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது
திருச்சி உய்யக்கொண்டான் பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்கப்படுவதாகஅரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி வயது 60 என்பவரை என்பவரை போலீசார் கைது செய்தனர்.
