Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி நகை கடையில் நகையை வாங்கிவிட்டு பணத்தை கட்டாமல் ரூ.12 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ரோட்டில் சேர்ந்தவர் முகமது போஸ் (வயது 37)இவர் திருச்சி- கரூர் பைபாஸ் ரோட்டில் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தங்க நகை கடையில் கிளை மேலாளராக வேலை செய்து வருகிறார். இதேபோல திருச்சி மேற்கு கரூர் எல்.பி.ஜி. நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகேயன் முகமது போஸ் வேலை செய்யும் கடையில் இருந்து தங்க நகைகளை வாங்கி அதனை தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். மேலும் அதில் வரும் பணத்தை முகமது போசிடம் கொடுத்து வந்தது வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி கார்த்திகேயன் முகமது போஸ் வேலை செய்யும் கடையிலிருந்து 56 லட்சத்து 67 ஆயிரத்து 391-க்கு தங்க நகைகளை வாங்கியுள்ளார். தங்க நகைகளை வாங்கிய கார்த்திகேயன் அதனை கரூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.பின்னர் விற்பனை செய்த பணத்திலிருந்து முகமது போஸ் ரூ. 44 லட்சத்து 66 ஆயிரம் மட்டுமே செலுத்தி உள்ளார். நகையை விற்பனை செய்த பணத்திலிருந்து மீதமுள்ள ரூ. 12 லட்சத்து ஆயிரத்து 391-யை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமதுபோஸ் இது குறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link