Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் வீட்டில் மலைபோல் குவிந்து கிடக்கும் ரூ.2000 நோட்டுகள்….. திடீர் பரபரப்பு

2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி அறிவித்தது. அந்த ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து அல்லது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தனது டுவிட்டர் பக்கத்தில் மலைபோல் குவிந்திருக்கும் ரூ.2000 நோட்டுகள் படத்தை பகிர்ந்துள்ளார்.  அவரது பதிவில், நடிகர் வெண்ணிலா கிஷோர் வீட்டுக்கு சென்றபோது இந்த போட்டோவை எடுத்தேன். இந்த 2000 நோட்டுக்களை வைத்து அவர் என்ன செய்வார் என ஆச்சரியமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். அவரது பதிவு சர்ச்சையான நிலையில் நடிகர் வெண்ணிலா கிஷோரை கலாய்க்கும் விதமாக நகைச்சுவையாகவே இது பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப அவருக்கு காமெடியான எமோஜியையே வெண்ணிலா கிஷோர் பகிர்ந்துள்ளார். காமெடி நடிகரின் இந்த பதிவுக்கு சிலர் நகைச்சுவையாகவும், சிலர் சீரியஸாகவும் பதிலளித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!