Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்….குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ரூ.47 லட்சம் மோசடி… தம்பதி கைது..

கரூர் மாவட்டம் மாநகர பகுதியில் உள்ள சின்னாண்டாங்கோவில் ரோடு பசுபதி லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை ஜெயந்தி தம்பதியினர் இருவரும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களை குறிவைத்து, மார்க்கெட் விலையில் இருந்து குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக, கரூர் மாவட்டத்தில் பலரிடம் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர் .

இது தொடர்பாக, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பெறப்பட்ட புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அண்ணாதுரை ஜெயந்தி ஆகிய இருவரையும் தீவிர விசாரணை பின் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!