நடிகர் அஜய் தேவ்கன், மும்பையில் உள்ள தனது பங்களாவின் ஒரு பகுதியை சலூன், ஸ்பா தொடங்க வாடகைக்கு விடும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதி இல்லாமல் வர்த்தகப் பணிகள் நடப்பதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, மும்பை மாநகராட்சி நிர்வாகம் கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தச் சொத்தை 5 ஆண்டுகளுக்கு ரூ.10.61 கோடிக்கு ஒரு நிறுவனத்திற்கு மொத்த வாடகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜய் தேவ்கன் பங்களாவில் சலூன், ஸ்பா: மாநகராட்சி நோட்டீஸ்
