கேரளாவின் கோழிக்கோடு வடகரை காவல் நிலையத்தில், இன்று போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை கீர்த்தனா, கையெழுத்திட வந்தபோது கத்தியால் குத்தப்பட்டார். அவரது கணவர் என்று கருதப்படும் நபர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. கழுத்தில் 5 இடங்களில் காயமடைந்த கீர்த்தனா, முதலில் வடகரை அரசு மருத்துவமனைக்கும் பின்னர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் ஸ்டேசனிற்குள் புகுந்து ஆசிரியைக்கு கத்திக்குத்து
