Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தயாரிப்பாளராக மாறிய சமந்தா

சமீபத்தில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், ‘இப்போது நான் எந்தவிதமான பதற்றமும், மன அழுத்தமும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன். எப்போதுமே பயத்துடன் செயல்படுவதை நிறுத்திவிட்டு, அதிக வலிமையுடன் செயல்பட தொடங்கியுள்ளேன். இந்த ஆண்டை நான் தெளிவு மற்றும் நல்ல நோக்கங்கள் கொண்ட ஆண்டாக பார்க்கிறேன். ஆரோக்கியம், உறவுகளுக்கு மதிப்பளிப்பது, சமூகத்துக்கு ஏதாவது திருப்பிக் கொடுப்பது போன்றவற்றை எனது தீவிர இலக்குகளாக கொண்டுள்ளேன். எனது அம்மா அளித்த ஊக்கத்தால் தொடங்கப்பட்ட ‘பிரத்யுஷா அறக்கட்டளை’ மூலம் குழந்தைகளுக்கு தேவையான அவசர மருத்துவ உதவிகளை செய்து வருகிறேன். நந்தினி ரெட்டி இயக்கத்தில், எனது காதல் கணவர் ராஜ் நிடிமோரு எழுதிய கதையில், நான் தயாரிக்கும் ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தில் நடிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.

error: Content is protected !!