சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் தேரோட்டம்.. பக்தர்கள் பரவசம்…

107
Spread the love

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் முக்கியமானது சமயபுரம்  மாரியம்மன் கோயில். இதன் உபகோயிலாக இருப்பது இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோயில் ஆகும். ஆதி மாரியம்மன் கோயிலின் தேர்த்திருவிழா கடந்த 24ம்தேதி துவங்கியது. தொடர்ந்து அம்மன் தினமும் சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.   இக்கோயிலின் விழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் இன்று நடந்தது. இன்று காலை அம்மன் சிறப்பு அலங்காரங்களுடன் திருத்தேருக்கு புறப்பாடு அடைந்து காலை 9 மணியளவில் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து 9-30.மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலாவாக சென்றது. வழிநெடுக அம்பாளுக்கு பக்தர்கள் மாவிளக்கு, தேங்காய் பழம் வைத்து வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைiயில் கோயில் அலுவலர்களும் பணியாளர்களும் செய்திருந்தனர்.

LEAVE A REPLY